அர்னாப் புயல் எதிரொலி: பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
அர்னாப் புயல் காரணமாக வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றங்கள் மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடல் சீற்றம் ஏற்படும் சூழல் நிலவுவதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் அன்றாட வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள் உள்ளிட்டோரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், அது துறைமுகத்திலிருந்து தொலைவில் இருக்கும்போது வழங்கப்படும் தொலைதூரப் புயல் எச்சரிக்கை என்பதை உணர்த்தும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


