in

ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் தேருக்கு துப்பாக்கி ஏந்திய 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் தேருக்கு துப்பாக்கி ஏந்திய 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி திருவிழா வரும் இருபதாம் தேதி கொடியேறி 28ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக தேர் செப்பனிடும் பணி தேருக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது .

ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் திருவிழாவில் வளம் வரும் நிகழ்ச்சியை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் தற்போது தேரின் பாதுகாப்பு தகடுகள் பிரிக்கப்பட்டு இருக்கும் சூழலில் நெல்லை மாநகர காவல் துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

நெல்லையப்பர் தேர் காந்திமதி அம்மன் தேர் விநாயகர் முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் என தனித்தனியாக துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது ஐந்து தேர்களுக்கும் பொதுவாக ஒரு ரோந்து வாகனமும் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமும் தேருக்கான பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

What do you think?

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோவிலில் வருஷாபிஷேக விழா

செஞ்சி அடுத்த சிங்கவரம் ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி கோவில் பத்து நாள் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது