in

நாகையில் அமைச்சர் கூட்டத்தில் திடீர் மின்வெட்டு – LED வெளிச்சத்தில் ஆலோசனை தொடர்ந்த ஆட்சியர்

நாகையில் அமைச்சர் கூட்டத்தில் திடீர் மின்வெட்டு – LED வெளிச்சத்தில் ஆலோசனை தொடர்ந்த ஆட்சியர்

நாகப்பட்டினம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இயற்கை இடர்பாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென அரங்கம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அமர்ந்திருந்த கூட்டத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக மின் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மின்சாரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மின்சாரம் வரும் வரை கூட்டத்தை நிறுத்த விரும்பாத மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், அரங்கில் இருந்த பிரம்மாண்ட LED திரையின் வெளிச்சத்தை பயன்படுத்தி கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.

LED திரையின் வெளிச்சத்திலேயே அமைச்சரும், அதிகாரிகளும் இயற்கை இடர்பாடுகள் குறித்த ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கூட்டத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்தியது.

What do you think?

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க சிறப்பான ஆட்சி நடைபெற பிரார்த்திப்பதாக தமிழக சிறுபான்மையினர் மற்றும் வக்பு நிர்வாக அமைச்சர் ஏ ஆர் ஷாஜகான் தெரிவித்தார்

அமைச்சர் நிகழ்ச்சியில் தவெக மாவட்ட செயலாளருக்கு கோட்டாட்சியருக்கு பக்கத்தில் இருக்கை