சிலுக்குவார்பட்டி அருகே தாதரையன்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன்,பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி அருகே உள்ள தாதரையன்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன்,பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் நேற்று முன்தினம் பல்வேறு புன்னிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரமாண்ட யாகசாலையில் வைத்து, ஆறு காலையாக வேள்விகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இக்கும்பாபிஷேக விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று அம்மன் உயிரூட்டல் நிகழ்ச்சியுடன் சீனிவாச சர்மா ஸ்வாமிகள் தலைமையில், சுரேஷ் பவுன் சிவாச்சியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜ கோபுர கலசத்திற்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர், அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள் ஓம் சக்தி……. பராசக்தி……. என விண்ணை முட்டும் கோசங்களை எழுப்பி அம்மனை வழிபட்டனர்…
இந்த விழாவிற்கு திண்டுக்கல், நிலக்கோட்டை,வத்தலக்குண்டு சோழவந்தான்,வாடிப்பட்டி சின்னாளப்பட்டி மற்றும் மதுரை கோவை நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது….


