in

பிக்பாஸ் பார்த்த இளைஞர்கள் அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் அன்புமணி ராமதாஸ் தகவல்

பிக்பாஸ் பார்த்த இளைஞர்கள் அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் அன்புமணி ராமதாஸ் தகவல்

 

பிக்பாஸ் பார்த்த இளைஞர்கள் அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் குரும்பூரில் அன்புமணி ராமதாஸ் தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த குரும்பூர் கிராமத்தில் , பாமக கிளைக் கழக ஆய்வு கூட்டம் மாநில இளைஞர் சங்க செயலாளரும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான ச அ கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டபோது பேசியதாவது,
இந்த கூட்டத்தில் அரசியல் பிரச்சினை என்ன.இந்த கிராமத்தில் என்னென்ன குறைகள் உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவும்அரசியல் சூழல் என்ன. 60 ஆண்டு கால அரசியல் இப்போது மாறியுள்ளது.

பிக்பாஸ் பார்த்த இளைஞர்கள் அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இனி சரியான அரசியல் எது என ஜென் சீ இளைஞர்களுக்கு புரியும் போது அவர்கள் நம்மை ஆதரிப்பார்கள்.

இதையொட்டி நம்ம கட்சியில் என்ன மாற்றம் கொண்டு வரவேண்டும். எப்படி கட்சியை வழிநடத்த வேண்டும் என்பது குறித்து நான் பேச வரவில்லை கேட்க வந்திருக் கிறேன் என்ற அவர் மக்களின் கருத்தை கேட்டறிந்தார்.

பிறகு அவர்களிடம் பேசிய அவர், மேல்மாவில் சிப்காட் அலகு வேண்டாம் என்பது நமது நிலைப்பாடு. அதற்காக 3500 ஏக்கர் விளைநிலங்கள் எடுக்கும் முயற்சி கள் நடைபெற்றது.

அதைத் தடுத்து நிறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. திருவண்ணாமலை மாவட்டத்தில் வேறு பகுதி களில் ஏராளமான தரிசு நிலம் உள்ளது .தொழிற்சாலை வேண்டாம் என்பது நமது எண்ணமல்ல.

வேறு இடத்தில் சிப்காட் அமைக்கப் பட வேண்டும்.நமது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைய உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரிக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றை செய்யாறு வழியாக பாலாறுடன் இணைக்க வேண்டும். விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசும் ஒரே கட்சி பாமக தான்.

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் அனைத்திற்கும்ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

நமது முக்கிய கொள்கையான இட ஒதுக்கீடு கோரிக்கை என்பதை
இரண்டே கால் கோடி வீடுகளில் வசிக்கும் 8 கோடிப்பேருக்குமானது.
இந்த கணக்கெடுப்பு நடந்து முடிந்தால் அனைத்து மக்களுக்கும்
வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை மேம்படும் என்று பேசினார் .

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாநில தலைமை நிலைய செயலாளர் பேராசிரியர் செல்வகுமார், மாவட்ட அமைப்பு செயலாளர் நடராஜ், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மகாதேவன், அருண், ஆனந்தன், மாதவன், மாவட்டத் துணைச் செயலாளர் மகேந்திரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடக் கருப்புக்கொடிகளுடன் புறப்படும் கருஞ்சட்டைப்படை: வைகோ அறிவிப்பு

சிலுக்குவார்பட்டி அருகே தாதரையன்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன்,பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா