in

சிதம்பரத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த 25 வயது பெண் வெட்டி படுகொலை 

சிதம்பரத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த 25 வயது பெண் வெட்டி படுகொலை 

சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி காமாட்சி தம்பதியினர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது,

இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்து காமாட்சி மீதிகுடி செங்கமேட்டு தெரு பகுதியில் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கணவன் இல்லாத காமாட்சியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் 65 என்பவர் தொடர்ந்து அவரது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

 

சில நாட்களுக்கு முன்பு மகேந்திரன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் அவரது காரில் வா எனக் கூறி காமாட்சியை கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது,

கையைப் பிடித்து இழுத்த மகேந்திரனை காரில் வைத்து செருப்பால் அடித்தும் அதனை தனது செல்போனை வீடியோ எடுத்து மகேந்திரன் குடும்பத்தினருக்கு அனுப்பவா என்று கேட்டதாக கூறப்படுகிறது.

காமாட்சியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்து இன்று காலையில் வீட்டில் இருந்த அவரை கத்தியால் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு அவரது தந்தை பாண்டுரங்கனை இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கி விட்டு தப்பி சென்றார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாமலை நகர் போலீசார் கொலை செய்யப்பட்ட காமாட்சி உடலை மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

65 வயதில் தீராத மோகத்தால் கணவனை பிரிந்து வாழும் பெண் ஆசைக்கு இணங்காததால் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

சப்த கன்னி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

செஞ்சியில் புத்தகக் கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா