கண் தொழில்நுட்ப ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
புதுச்சேரி அரசு மருத்துவமனை கண் தொழில்நுட்ப ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்…
புதுச்சேரி அரசு மருத்துவமனை கண் தொழில்நுட்ப ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்.
அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், பொது செயலாளர் லட்சுமணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சுகாதார ஊழியர் கூட்டமைப்பு தலைவர் அரிகரன், பொது செயலாளர் பிரபாத் முன்னிலை வகித்தனர். கண் தொழில்நுட்ப சங்க நிர்வாகிகள் ஆதிமூலம், காசிநாதன் ஒருங்கிணத்தனர்.

புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 50 சதவீத கண் தொழில்நுட்ப பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். திருத்திய சம்பள விகிதத்தை அமல்படுத்த வேண்டும். பணியாளர் சேர்ப்பு விதிகளை திருத்த வேண்டும்.
பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்த பின் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

