in

வடலூரில் வாலிபரை தாக்கிய, இன்ஸ்பெக்டரை கண்டித்து, உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியல்

வடலூரில் வாலிபரை தாக்கிய, இன்ஸ்பெக்டரை கண்டித்து, உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் வடலூர் கல்லுக்குழி, காவல் நிலையம் பின்புறம் பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் சதீஷ்குமார் இவர் நேற்று குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில், உள்ள தனது மனைவிக்கு இரவு உணவு கொடுத்துவிட்டு, இரவு 11 மணி அளவில், காரில் தனது குழந்தைகளுடன் வீடு திரும்பினார்.

கடலூர் சாலையில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகில், வாடகை வீட்டில் காரை நிறுத்திவிட்டு, குழந்தைகளை இறக்கிவிட்டு, பின்னர் காரை லாக் செய்துள்ளார்.

அப்போது இரவு நேர ரோந்து பணியில், ஈடுபட்டிருந்த வடலூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ், அங்கு வந்து ஏன் இங்கு நிற்கிறாய்? கார் யாருடையது? என்று கேட்டு சாவி மற்றும் லைசன்ஸ் கொண்டு வா என்று கேட்டுள்ளார்.

இதில் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது இன்ஸ்பெக்டர் கையிலிருந்த, டார்ச் லைட் சதீஷ்குமார் தள்ளி விட்டதாக, போலீஸ் தரப்பில்
கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார் ஆபாசமான வார்த்தைகளால், திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வடலூர் நான்கு முனை சந்திப்பில், நள்ளிரவு ஒரு மணி அளவில் உறவினர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக, கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

கூட்டணி தர்மத்தை மதித்து நாங்கள் உண்மையாக இருக்கிறோம் மேடைப்பேச்சு குறித்து பிரேமலதா கருத்து.