in

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம்


Watch – YouTube Click

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம்

 

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டணியின் புதுச்சேரி தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை அறிமுகப்படுத்தினார்.

மேலும் தாமரை பொக்கே கொடுத்து நமச்சிவாயத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்பொழுது வேட்பாளர் நமச்சிவாயம் தாமரைச் சின்னத்தை உயர்த்தும் பிடித்தார் தொண்டர்கள் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோஷங்களை எழுப்பினர்..

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, மத்தியில் ஆளுவது பாஜக ஆட்சி. வரப்போகும் ஆட்சியும் பாஜக தான். கருத்துகணிப்பில் நமது மோடி மீண்டும் வருவார் என்பது தான். வரும் ஆட்சி தேசிய ஜனநாயக ஆட்சி தான்.
அப்படி இருக்கும் போது இங்கிருந்து யாரை வெற்றி பெற்று அனுப்பலாம்.

யாரை நன்கு தெரிந்த முகமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய போது எல்லோருக்கும் தெரிந்த ஒருவர் என்றால் அது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தான். ஆனால் அவருக்கு இதில் சிறிது கூட விருப்பம் இல்லை. அவர் அங்கே மத்திய அமைச்சராக ஆவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் நமச்சிவாயத்தை அனுப்புகிறோம் என்றார்.

கடந்தமுறை காங்கிரசுக்கு விட்டுவிட்டோம். இந்தமுறை மீண்டும் காங்கிரசுக்கு விட கூடாது. அப்போது நாம் ஆட்சியில் இல்லை. இப்போது உள்ளோம். விட்டதை பிடிப்போம். எனவே வெற்றி பெறுவது எளிதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் வேலை செய்ய வேண்டும் என ரங்கசாமி பேசினார்.

நமது பாராளுமன்ற உறுப்பினர் அங்கு சென்றால் நிறைய திட்டங்களை எடுத்து கொண்டு வருவார். அவர்கள் சென்றால் ஒரு ஓரமாகத்தான் இருக்க வேண்டும். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் போது இவர் அதில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே நமது என்.ஆர்.காங்கிரசார் நமது கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.

நமது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக வாக்குகளை பெற்றுதர வேண்டும். எந்த பிரோஜனமும் இல்லாத ஒருத்தரை அனுப்பும் போது நமக்கு பிரோஜனம் உள்ள நமது வேட்பாளரை வெற்றி பெற வைத்து அனுப்ப வேண்டும்.

தேர்தல் முடியும் வரை நமக்கு ஓய்வு இருக்க கூடாது. கடுமையாக உழைத்து வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் ரங்கசாமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்…


Watch – YouTube Click

What do you think?

சட்ட விரோதமாக …..சிறுமியை… நடிகை சோனு கைது செய்து விசாரணை

தண்ணீர் வறட்சியின் காரணமாக நள்ளிரவில் கிராமத்திற்குள் படையெடுக்கும் முதலைகள்