நாமக்கல் பரளி அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலய வைகாசி திருவிழா சிங்க வாகனத்தில் திருவீதி உலா கண்ட செல்லாண்டியம்மன்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் பரளி கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது
எட்டுப்பட்டிக்கு சொந்தமான இந்த திருவிழாவில் இன்று காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் உற்சவ செல்லாண்டியம்மன் சிங்கமுக வாகனத்தில் ரதம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது .
பின்னர் கிழ்பரளி, வடக்கு சாலை பொய்யோரி காடு, மேல் பரளி, கங்காணிப்பட்டி, கம்பத்தூர்பட்டி,உள்ளிட்ட 8 ஊர்களுக்கு சென்று பூஜை நடைபெற்து அப்போது பக்தர்கள் மாவிளக்கு வைக்கும் தேங்காய் பழம்உடைத்தும் செல்லாண்டியம்மனை வழிபாடு செய்தனர் .
பின்னர் செல்லாண்டியம்மனை மூன்று முறை சுற்றி சிறப்பு வழிபாடு செய்தனர் பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்திருந்தது

