காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழக அரசு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாய சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாநில தலைவர் முகமது இப்ராகிம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மற்றும் ஜூன் 12 குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்


