புதுச்சேரி..பெட்ரோல்-டீசல் விலை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்..
வாகன ஓட்டிகள் அவதி கடும் வாக்குவாதம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் இன்று புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை வில்லியனூர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அங்குள்ள நான்கு முனை சந்திப்பில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலைகளை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் நான்கு புறமும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் பரிதவித்தனர். ஒரு சிலர் பொருமையை இழந்து,”ஒரு பக்கமாக வாகனத்தை அனுமதிக்க வேண்டும்..
போராட்டத்தை ஓரமாக நடத்திக் கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர். இருப்பினும் விடுதலை சிறுத்தை கட்சியினர் கேட்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.இதனையடுத்து வில்லியனூர் போலீசார் அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகன போக்குவரத்து சீரானது..


