புரட்டாசி மாத குருவார பிரதோஷம்
முன்னூர் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் புரட்டாசி மாத குருவார பிரதோஷம்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் முன்னூர் குரு பரிகார ஸ்தலமான ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் கோயில் குரு வார பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ நந்தி பகவானுக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கு பஞ்சமுக தீபாரதனை மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து உற்சவர் ஆடவல்லீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிரகன் நாயகி அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு கோயில் வெளிப்பிரகாரம் மலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் இது குரு பரிகார ஸ்தலமாக இருப்பதால் குருவார பிரதோஷத்தில் கலந்து கொள்வதால் குரு புத்தி நடப்பவர்கள் அல்லது குரு தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் கிடைக்கும்.
வியாழக்கிழமை குருவுக்குரிய நாள் என்பதால், இந்நாளில் பிரதோஷ வழிபாடு செய்வது மாணவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி, புத்தி கூர்மை மற்றும் கல்வியில் சிறந்த வெற்றியைக் கொடுக்கும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
