வேடசந்தூர் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா
வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் 2500 கிலோ அரிசியில் நெய் சாதம் சமைத்து மாபெரும் கந்தூரி விழா
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில், நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 2500 கிலோ அரிசியில் பிரமாண்டமாக நெய் சாதம் தயாரிக்கப்பட்டது.
பெரிய பாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட நெய் சாதம், விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்புடன் வழங்கப்பட்டது.
மதம், இனம், வயது என எந்த வேறுபாடுமின்றி ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கந்தூரி விழாவில் பங்கேற்றனர்.
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாபெரும் கந்தூரி விழா, வேடசந்தூர் பகுதி மக்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
2500 கிலோ அரிசியில் தயாரான நெய் சாதம்… பக்கெட் பக்கெட்டாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட விருந்து… வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற கந்தூரி விழா, ஊரையே விருந்தாக்கியது.
