திருவருள் பிரகாச வள்ளலார் அவர்களின் 204வது அவதார தினவிழா
கடலூர் மாவட்ட செய்தியாளர் S.ரவி . சர்வ ஜீவ தயாபரமான அருள்பாலிகின்ற
திருவருள் பிரகாச வள்ளலார் அவர்களின் 204வது அவதார தினவிழா.
கடலூர் பீச் ரோட்டில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் இன்று திருவருள் பிரகாச வள்ளலார் அவர்கள் இந்த உலகில் அவதரித்த 204 ஆவது ஆண்டினை முன்னிட்டு வள்ளலார் சபையில் இன்று வள்ளலார் பக்தர்களால் அகவல் பாராயணம் மற்றும் தீபஜோதி தரிசனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வள்ளலார் அவர்கள் இயற்றிய அருட்பாவினை ஆறுமுக நாவலார் அவர்கள் அருட்பா அல்ல மறுப்பா என 1869 ஆண்டு கடலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்
வழக்கில் வள்ளலார் வெற்றியும் பெற்றார்.
வள்ளலார் அப்பகுதியில் கால் பதித்த இடத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சபை உள்ளது.
இச்சபையில் இன்று வள்ளலார் அவதரித்த நாளை முன்னிட்டு வள்ளலார் ஆசியுடன் வெகு சிறப்பாக அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பிரசாதம் உண்டு மகிழ்தனர்.
