in

கட்சியின் பெயரில் மாற்றம் செய்த தளபதி விஜய்

கட்சியின் பெயரில் மாற்றம் செய்த தளபதி விஜய்

நடிகர் விஜய் சமீப காலமாக தனது ரசிகர் மன்றங்கள் எல்லாவற்றையும் நலப்பணி மன்றங்களாக மாற்றி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார்.

சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டார்.

கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடும் என்று அறிக்கையை வெளியிட்ட விஜய் இனி முழு நேர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாக கூறினார்.

இதற்கிடையில் நடிகர் விஜய் தொடங்கிய கட்சியின் பெயரில் பிழை இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தது, “க்” என்ற சொல்லை சேர்க்காமல் இலக்கண பிழை செய்திருபதாக சமூக வலைத்தளங்களில் பலர் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் கட்சியின் பெயரில் மாற்றம் செய்து தற்பொழுது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று விஜய் தரப்பிலிருந்து செய்தி வெளியானது.

What do you think?

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் திடீர் உயிர் இழப்பு

போலீஸ் Constable பணிக்காக சன்னி லியோன் விண்ணப்பித்தரா? அதிர்ந்த போலீசார்