நர்சிங் மாணவி நாடகம் போலீசார் விசாரணையில் அம்பலம்
திருவெறும்பூர் அருகே காதலன் திருமணம் செய்து கொள்வது இரண்டு முறை தள்ளிப் போனதால் தன்னை கடத்தி விட்டதாக நர்சிங் மாணவிநாடகம் ஆடியது போலீசார் விசாரணையில் அம்பலமானது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகள் ரோஷினி (19) இவர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் உயர்கொண்டான் வாய்க்கால் கரை பகுதியில் அழுது கொண்டு நடந்து வந்ததாகவும் அப்பொழுது அதனை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணிடம் என்ன என்று விசாரித்த போது தன்னை சிலர் தாக்கி கடத்தி வந்ததாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து அப்பெண் உடனடியாக காட்டூர் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து வந்து உள்ளனர்.
அதன் அடிப்படையில் அங்கு அதன் பெண்ணை பறிசோதித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் மற்றும் அரியமங்கலம் போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு இரண்டு காவல் நிலைய போலீசாரும் விரைந்து வந்ததோடு இச்சம்பவம் காட்டுத் தீ போல் பரவியதை தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் குவிய தொடங்கினர்.
இந்த நிலையில் அந்த பெண்ணிடம் விசாரணை செய்த பொழுதுஅந்தப் பெண்இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தன்னை தலையில் இரும்பு ராடால் தாக்கிகடத்திச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்ததாகவும் அப்படி தன்னை கடத்திச் சென்ற பொழுது தனது செல்போனில் தனது சித்தப்பாவிற்கு தகவல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
பின்னர் தன்னை நான்கு பேர் கடத்தி காரில் கடத்தி வந்ததாகவும் வயிற்றில் மிதித்ததாகவும்அவர்கள் பேசிய பாசை தெரியவில்லை என்றும் வடநாட்டவர்கள் போல் இருந்தார்கள் என்றும் கூறியுள்ளார். இப்படி முன்னுக்குப் பின் முரணாக ரோஷினி பேசியதால் போலீசார் குழப்பம் அடைந்ததோடு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்களும் பெண் தலையில் தாக்கப்பட்டதற்கோ வைத்தில் தாக்கப்பட்டதற்கோ உரிய எந்த அறிகுறியும் இல்லை என தெரிய வந்து உள்ளது.
ரோஷினி முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அரியமங்கலம் போலீசார் ரோஷினியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.ரோஷினி சொன்ன பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் அதிலும் ரோஷினி கடத்தப்பட்டது போல் எந்தவித பதிவும் இல்லை இதனால் அரியமங்கலம் போலீசார் ரோசினியை பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதன் அடிப்படையில் பொன்மலை மகளிர் காவல் நிலைய போலீசார் ரோஷினியை அழைத்துச் சென்று விசாரித்த பொழுது ரோஷினி சீராதோப்பில் உள்ள தனது உறவினர் ஒருவரை 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் இதற்கிடையில் இரண்டு முறை இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு தள்ளிப்போனதாகவும் இதனால் மனம் விரக்தி அடைந்த ரோஷினி என்ன செய்வது என்று தெரியாமல் இப்படி செய்துவிட்டார் என்றும் தெரியவந்தது அதன் அடிப்படையில் காதலனை வரவழைத்துதிருமணம் செய்து கொள்ள வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டுபெற்றோருடன் பொன்மலை மகளிர் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவம் திருவெறும்பூர் அரியமங்கலம் மற்றும் பொன்மலைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.