குறைந்த வட்டியில் கோல்டு லோன் என கூறி கூலித்தொழிலாளர்கள் அடகுவைத்த நகைகளோடு கடையை பூட்டிவிட்டு எஸ்கேப் ஆன அடகுகடை உரிமையாளர்
தனியார் பேங்க்ல வச்சு திருப்பமுடியாதுனு அடகு கடைல வச்சோம், புள்ளங்க படிப்புக்காக வச்சோம் இப்போ பணமும் போச்சு நகையும் போச்சு 18 பட்டிகாரங்களும் அடகுவச்ச நகைலாம் போச்சு – பெண்கள் வேதனை
*புருசன் புள்ளங்களெல்லாம் நகைய கேட்டு திட்டி அடிக்கிறாங்க ; நகையை வீட்ல வித்து குடிச்சிருவாங்கனு பத்திரமாக வச்ச நகையெல்லாம் போச்சு சார் – ஐயா முதலமைச்சர் விஜய் எங்க நகைய எப்டியாவது வாங்கிதாங்க கண்ணீர் விட்டு அழுத பெண்கள்*
*எனக்கு பிரஷர் தலை சுத்துத்துனு நாளை வர்றேனு சொல்லி நகை அடகுவச்சவங்கள 4 மாசம சுற்றிவைத்து தவிக்க விட்ட அடகுகடை உரிமையாளர் துரைமுருகன்*
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏழுமலை பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீ முருகன் தங்க நகை அடகு கடையை துரைமுருகன் என்பவர் தொடங்கி நடத்திவந்துள்ளார்.
குறைந்த வட்டியில் நகை அடகு வைப்பதாக கூறி ஆசை காட்டிய நிலையில் ஏழுமலை பேரையூர் உசிலம்பட்டி ஆண்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளிகள் நகைகளை அடகுவைத்துள்ளனர்.
தங்களுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக சிறிய சிறிய நகைகளை கூட அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக துரைமுருகனுக்கு சொந்தமான அடகு கடையில் நகைகளை அடகு வைத்த பொதுமக்கள் அதற்கான வட்டி தொகையையும் அடமான தொகையும் முழுவதுமாக செலுத்திய நிலையில் நகையை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இது குறித்து அங்குள்ள பணியாளர்களிடம் கேட்கும் போது துறைமுகம் இடம் கேட்டு விட்டு பணத்தை தருவதாக தெரிவித்துள்ளனர் ஆனாலும் நகை கிடைக்காத நிலையில் திடீரென அடகு கடை மூடப்பட்டுள்ளது இதனை பார்த்து நகைகளை அடகு வைத்த பொதுமக்கள் துறைமுருகனின் வீட்டிற்கு நேராகச் சென்று கேட்டபோது தனக்கு பிரசர் இருப்பதால் அடிக்கடி தலை சுற்றுகிறது எனவே கடைக்கு வந்தால் நீங்கள் நகை கேட்பீர்கள் அதனால் உங்கள் நகையை அடுத்த வாரம் தந்து விடுகிறேன் .
என கூறி சமாளித்துள்ள பின்னர் ஒரு வாரம் ஆகியும் நகைகளை தராத நிலையில் ஏமாற்றம் அடைந்த நகைகளை அடகு வைத்த பொதுமக்கள் துரைமுருகனின் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த நகைகளை இழந்த பொதுமக்கள் உசிலம்பட்டி நகர எழுமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை நிலையில் தற்போது நான்கு மாத காலம் ஆகியும் தங்களுக்கான வட்டி தொகையும் அசல் தொகையும் செலுத்தியும் கூட நகைகளை இழந்து தவிப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளோடு தற்பொழுது துரைமுருகன் தலைமறைவாக உள்ளதால் தங்களது நகைகளை மீட்பதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களது நகைகளை மோசடி செய்த ஸ்ரீ முருகன் கோல்டு லோன் கடையின் உரிமையாளர் துரைமுருகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது நகைகளை மீட்டு தர முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,,குறைந்தவட்டியில் கோல்டு லோன் என கூறி கூலித்தொழிலாளர்களான தங்களை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
தனியார் பேங்க்ல வச்சு திருப்பமுடியாதுனு அடகு கடைல வச்சோம், புள்ளங்க படிப்புக்காக வச்சோம் இப்போ பணமும் போச்சு நகையும் போச்சு 18 பட்டிகாரங்களும் அடகுவச்ச நகையெல்லாம் போச்சு; புருசன் புள்ளங்களெல்லாம் நகைய கேட்டு திட்டி அடிக்கிறாங்க ; நகையை வீட்ல வித்து குடிச்சிருவாங்கனு பத்திரமாக வச்ச நகையெல்லாம் போச்சு ஐயா முதலமைச்சர் விஜய் எங்க நகைய எப்டியாவது வாங்கிதாங்க என தெரிவித்தனர்.
கஷ்டப்பட்டு உழைச்சு வாங்கின நகை சார் இப்ப எல்லாம் நகை வாங்குறதெல்லாம் நினைச்சு கூட பாக்க முடியாது பொம்பள புள்ள வச்சிருக்கிறோம். ஒரு பவுன் விலை ஒரு லட்ச ரூபாய தாண்டிருச்சு எங்க நகையும் போயிருச்சுனா எங்களால வாழவே முடியாது எப்படியாவது எங்க நகையை காவல்துறை அதிகாரிகள் எப்டியாவது மீட்டு கொடுத்துடுங்க என்றனர்.

