in ,

இன்றைய முக்கிய செய்திகள் 10.08.2024


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் 10.08.2024

1 , புதுச்சேரி முத்தால்பேட்டை சேர்ந்தவர் வெங்கட்ராம். B.Tech பட்டதாரியான இவர்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

2 , கோடை விடுமுறை முடிந்து கரூரில் பள்ளிகள் திறப்பு – தலைமை ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் புதர்போல் மண்டி கிடந்த குப்பைகளை தூய்மைப்படுத்திய ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் பாராட்டு.

3 , புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் 1029 வழக்கறிஞர்கள் வாக்களிக்கின்றனர் தலைவர் பதவிக்கு 6-பேர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுகிறது

4 , புதுச்சேரி அடுத்த திருக்கனூர் மண்ணாடிபட்டு வாதானூர் சோம்பட்டு கூனிச்சம்பட்டு செட்டிபட்டு உள்ளிட்ட கிராமங்களில் அறிவிக்கப்படாமல் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மின்தடை,புகார் எடுக்க ஆளில்லாததால் மின்துறையை கைப்பற்றிய பொதுமக்கள் காலை 10:30 மணி வரை அலுவலகத்திற்கு ஊழியர்கள் வராததால் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்து பணி செய்து எதிர்ப்பு

5 ,புதுச்சேரி நடு வீதியில் பற்றி எரிந்த பைக்.
விழுப்புரம் பகுதியை சேர்ந்த சூர்யா இன்று மதியம் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் எதிரில் இந்திராகாந்தி சிலையில் இருந்து நெல்லித்தோப்பு சிக்னலை நோக்கி இருசக்கர வாகனத்தில் வரும்பொழுது தீடிரென்று இருசக்கர வாகனம் தீ பிடித்த எரிந்தது இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர் பைக்கை நிறுத்திவிட்டு தள்ளி நின்றார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தார்கள்

6, கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிபெறும் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிக்கு வருகை தரும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

7 , புதுச்சேரி மின்துறை மதில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 5 நபர்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும் காயமடைந்ததற்கு 3 நபர்களுக்கு 3 லட்ச ரூபாயும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்..

8, திண்டுக்கல்லில் பள்ளி திறந்த முதல் நாளே பள்ளிக்குச் செல்லாமல் பேருந்து வசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளால் பரபரப்பு.

9 ,விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆரியாஸ் ஹோட்டலில் நடைபெற்ற கோடை விடுமுறை முன்னிட்டு ராமன் ரெட்டி தெலுங்கு பாடசாலையில் தெலுங்கு பயின்ற 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

10, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை கிராமத்தை சேர்ந்த சிசேல் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீசல்ஸ் நாட்டில் சென்று அங்கே செட்டில் ஆகிவிட்டார் இருப்பினும் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சொந்த ஊரை மறக்காத மருத்துவர், பிறந்த கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளில் விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஆம்புலன்ஸ் சேவையை வழங்கிய நல்லாடை மருத்துவர் ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். தேனிசை தென்றல் தேவாவின் இன்னிசை கச்சேரி கிராமமக்களை கவர்ந்தது:-

11,மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு இன்று துவங்கியது. ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்காக கதவை இழுத்து பூட்டிய காவல்துறையினர் டி என் பி எஸ் சி தேர்வு எழுத முடியாமல் சாலை மறியலில் ஈடுபட்ட தேர்வர்கள் :

 

12, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வானதி ராஜபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியல் செய்யக்கூடாது என்பதை தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு உணர்த்தியுள்ளன, அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற வேகத்தடையை பிரதமர் மோடிக்கு ஏற்படுத்தி உள்ளது மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி :-

13,மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குடிநீர் கழிவறை வசதி செய்யப்பட முடியவில்லை, எத்தனை முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினரிடம் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் புகார் :-

14, மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழர்களுக்கான தனி நாடு கேட்பேன், மோடி விபூதி அணிகிறார், தியானம் செய்கிறார், சவுதி அரேபியா செல்கிறார் அதனால் மோடியை பிடிக்கும் , இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது – மதுரை ஆதினம் பேட்டி

15, தமிழகம் முழுவதும் பள்ளி திறப்பையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள 701 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்தால்தான் மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவார்கள் ; பள்ளி தொடக்க நாளில் நாகை ஆட்சியர் அறிவுரை


Watch – YouTube Click

What do you think?

மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி

நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் மதுரை ஆதினம் பேட்டி