in

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா


Watch – YouTube Click

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா

 

திண்டிவனம் அடுத்த மயிலத்தில் நடைபெற்ற மயிலம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக் குட முழக்கு நன்னீராட்டு பெரு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் ஸ்ரீமத் சிவ ஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், பால சித்தர், வள்ளி தெய்வானை உடனுறை முருகப் பெருமான் ஆகிய கோவில்கள் புனரமைக்கப்பட்டு
திரு குட முழுக்கு நன்னீராட்டு பெரு விழாவானது இன்று காலையில் 9 – 15 மணியிலிருந்து 10 – 45 க்குள்ளாக வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கடந்த 15.ம் தேதி விநாயகர், பால சித்தர், வள்ளி தெய்வானை உடனுறை முருகப் பெருமான் வழிபாடு இறை அனுமதி பெறுதல், மகா கணபதி வேள்வி, திருமகள் வேள்வி, கன்னிகா பூஜை மற்றும் கோ பூஜை ஆகியவை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வேள்வியில் பூர்ணாஹூதி செலுத்தப்பட்டது.
பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 18 -ஆம் தேதி மாலையில் முதல் கால வேள்வி வழிபாடும், 19 ஆம் தேதி காலை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக வேள்விகளும், 20-ஆம் தேதி நான்காம், ஐந்தாம் கால யாக வேள்விகளும் நடைபெற்றது.

வேள்வியில் நெய் முதலான 108 புனிதப் பொருட்கள் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து21- ஆம் தேதி இன்று காலையில் மங்கள இசையுடன் ஆறாம் கால யாக வேள்விகள் நடைபெற்றது.

தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் புனித கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து விமான கோபுர கலசங்கள் மற்றும் வினயகர், பாலசித்தர், வள்ளிதெய்வானை உடனுறை முகப் பெருமான் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மைலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருக்கரங்களால் புனித நீர் ஊற்றப்பட்டு திருக் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

இதில் பல்வேறு சந்நிதானங்களை சேர்ந்த ஆதினங்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் மட்டுமல்லாது புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும ஆயிரக்கணக்கான பகதர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதில்எந்த விதமான அசம்பாவிதாலும் நடக்காத வகையில் விழுப்புரம் ஏடி எஸ் பி கோவிந்தராஜ் தலைமையில் திண்டிவனம் டி எஸ்.பி சுரேஷ் பாண்டியன் மேற்ப்பார்வையில சுமார் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

கைலாஷ் சத்யார்த்தி கல்வி கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

புதுச்சேரியில் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்