in

விவசாயிகளுக்கு டிப்ஸ் கொடுத்த அமைச்சர்


Watch – YouTube Click

விவசாயிகளுக்கு டிப்ஸ் கொடுத்த அமைச்சர்

 

புதுச்சேரி விவசாயிகளுக்கு பல்நோக்கு பயனுள்ள மரங்களை வைத்து வாழ்க்கையை செம்மையாக்குங்கள்; வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வேண்டுகோள்

கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், புதுச்சேரி வனம் மற்றும் வனவிலிங்குத் துறை இணைந்து மரம் வளர்போர் விழாவை நடத்தியது.

இதில் புதுச்சேரி வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். மேலும் விழா கண்காட்சி, புதுச்சேரிக்கான வன அறிவியல் நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். அந்த நிறுவனத்தில் தயாரிப்புகள் மற்றும் ஆவணப்படங்களையும் வெளியிட்டார்.

தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் புதுச்சேரி மாநிலத்தில் நான் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து புங்கை, ஆபிரிக்கன் தேக்கு, அமெரிக்கன் தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகளை இலவசமாக தருகிறோம். இது பலருக்கும் தெரியாது.

புஞ்சை மண் வைத்திருப்பவர்கள் 25 அடியில் தென்னை, மகோக்கனி, பலா, மா மரங்களை நடுங்கள். அவ்வாறு நட்டால் தேவையான பழங்களும் கிடைத்துவிடும். 20 ஆண்டுகளில் வியாபார நோக்கத்துடன் அந்த மரங்களை வெட்டும்போது உங்களின் பேரக்குழந்தைகளின் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு உதவும்.

தற்போது எப்போதும் காய்க்கும், மா, பலா மரங்கள் வந்துவிட்டது. இதன் மூலம் வருவாயும் கிடைக்கும், இறுதி வாழ்க்கையில் உபயோகக்கரமாகவும் இருக்கும். அந்த காலத்தில் வீடுகள் தோறும் வேப்பம், பூவரசம் மரங்கள் இல்லாத வீடுகள் உண்டா. அன்றைக்கு சொந்த வீடு மகனுக்கு கட்ட வேண்டும் என்று தந்தை நினைத்தால் வேப்பம், பூவரசம் மரம் இருந்தால் போதும். அப்போது தேக்கு மரங்கள் இருந்ததா. தேக்கு மங்களை வசதியுள்ள விவசாயிகள் தான் தேடிச் செல்கின்றனர்.

இன்றைக்கு நம்முடைய வாழ்க்கை முறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். விரைவாக வளரக்கூடிய நிறைய மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு சார்பில் பல மரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதனை வனத்துறை தான் மக்களிடம் சொல்ல வேண்டும். வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு செம்மரம், மகோக்கனி மரங்களை வைய்யுங்கள். இதுபோன்ற பல்நோக்கு பயனுள்ள மரங்களை வைத்து வாழ்க்கையை செம்மையாக்குங்கள். என வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேளாண்துறை இயக்குனர் வசந்தகுமார் கடலூர் விழுப்புரம் வனத்துறை அதிகாரிகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ரூ 59. 57 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப கட்டிடம்

சத்யஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு