in

உலக புகழ்பெற்ற ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு மார்ச் 21 உள்ளூர் விடுமுறை


Watch – YouTube Click

உலக புகழ்பெற்ற ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு மார்ச் 21 உள்ளூர் விடுமுறை

 

உலக புகழ்பெற்ற ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு மார்ச் 21 உள்ளூர் விடுமுறை. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வ தோச பரிகார தலமாகவும் விளங்கும் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் மார்ச் 21 ஆம் தேதி பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர் திருவிழாவை காண்பதற்காக தமிழகம் மட்டுமில்லாது வெளி மாநிலங்களிலி ருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் திருவாரூருக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் வருடம் தோறும் இந்த ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும்.

அதன் அடிப்படையில் இந்த வருட தேர்த் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் கருவூலங்கள் சார் நிலை கருவூலங்கள் அவசர அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும் என்றும் அதேசமயம் அன்று நடைபெறும் பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியில் தன்னை இணைத்துக்கொண்ட நடிகர் விஜய்

புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்