in

உலக தாய்மொழி நாளை முன்னிட்டு மொழி உணர்வு பேரணி


Watch – YouTube Click

 

உலக தாய்மொழி நாளை முன்னிட்டு மொழி உணர்வு பேரணி

உலக தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழ் அறிஞர்கள் கவிஞர்கள் பாவலர்கள் கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற மொழி உணர்வு பேரணி

தமிழ் மொழியை பெருமைப்படுத்த வீதி வீதியாக வலம் வந்த வள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன்

ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் நாள் அன்று உலகத் தமிழ்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மொழியின் அவசியத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

தாய்மொழியாம் தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் வகையில் மக்களுக்கு தமிழ் மொழி ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையிலும் இராதே அறக்கட்டளை சார்பில் மொழி உணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணி சுதேசி பஞ்சாலை அருகில் தொடங்கி மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷின் வீதி வழியாக ஆம்பூர் சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.

பேரணிக்கு இராதே அறக்கட்டளை நிறுவனர் தேவதாஸ் தலைமை தாங்க பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் சிவகான பூதகான இசைக்குழு, மற்றும் நாதஸ்வர தவில் இசையுடன், தமிழ்த்தாய் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், ஆகியோர்களின் வேடமடைந்த நாடகக் கலைஞர்கள் அணிவகுத்து சென்றனர்.

மேலும் தமிழ் அறிஞர்கள் அணிவகுத்து செல்ல கோலாட்டம், பொய்க்கால் குதிரை, குச்சிக்கால் ஆட்டம், மாடு நடனம், மயில் நடனம், புள்ளி வேட ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், பெரிய மேளம் தெருக்கூத்து கலைஞர்கள் பங்கேற்று தங்களது தமிழ் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.

புதுச்சேரியில் தமிழ் மொழி ஏற்றத்திற்காக உரிமைக்காக பாடுபட்ட மறைந்த தமிழ் அறிஞர்களான வாணிதாசன், தமிழ் ஒளி, புதுவை சிவம், கம்பதாசன், சித்தன், திருமுடி சேதுராமன், சுந்தர சண்முகனார், சிவ கண்ணப்பா, அரிய புத்திரனார், திருமுருகன்,ம.இலே தங்கப்பா ஆகியோர்களின் உருவப்படமும் அலங்கரித்து எடுத்து செல்லப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

அரை நூற்றாண்டு கால கனவு நிறைவேறியது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோல போட்டி