in

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா முழுவதும் போதை ஊசிகள் அதிகரித்துவிட்டது


Watch – YouTube Click

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா முழுவதும் போதை ஊசிகள் அதிகரித்துவிட்டது

 

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் (தனி) தொகுதியில் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து வீசிக தலைவர் திருமாவளவன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பொழுது அவர் கடந்த 2006 -ஆம் ஆண்டு நமது கட்சி முறையாக பதிவு செய்யப்பட்ட நிலையிலும், இது வரையில் அரசியல் அங்கீகாரம் பெறவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக அரசியல் அங்கீகாரம் பெரும் வாய்ப்பு கலைஞர் கருணாநிதி மூலமாக உருவாகியது .

அதனை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ளாததால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஆனால் தற்பொழுது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

இதனை நாம் முறையாக பயன்படுத்திக் கொண்டு இரண்டு பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று அரசியல் அங்கீகாரம் பெறுவதோடு, கட்சிக்கு தனி சின்னம் பெற பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர்,பிரதமர் மோடி ஆட்சி இனியும் நீடித்தால் டாக்டர் அம்பேத்கர் எழுதி வைத்த சட்ட திட்டங்களுக்கு பேராபத்து ஏற்படும் என்றார். மேலும் அவர் இந்திய முழுவதும் பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் போதை ஊசிகள் அதிகரித்துள்ளது.

இந்த போதை ஊசிகள்அதானியின் விமானம் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும், இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது என்று குற்றம் சுமத்தினார்.

மேலும் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்றால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நமது வாக்குகளை பிரித்து வாக்களிக்காமல், ஊரில் உள்ள வாக்குகளை முழுவதுமாகவும், தெருவில் உள்ள வாக்குகளை முழுவதுமாகவும், அதே போன்று நமது குடும்பத்தில் உள்ள வாக்குகளை முழுவதுமாகவும் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக பேசிய சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் பாசிச பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வாக்காளர்கள் அனைவரும் பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும், இதே போன்று ஜாதி, மதம் இல்லாத
கட்சி மத்தியில் ஆட்சி செய்ய வேண்டுமானால் பிஜேபியை பொதுமக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


Watch – YouTube Click

What do you think?

தற்போதைய கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும் தே மு தி க சுதீஷ் பேச்சு

முக்தார் அன்சாரி மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து உபியில் 144 தடை உத்தரவு அமல்