in

தலைகனம் யாருக்கு இருந்தாலும் அழிவு நிச்சயம்


Watch – YouTube Click

தலைகனம் யாருக்கு இருந்தாலும் அழிவு நிச்சயம்

 

இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக கதிர்காமம் தொகுதி திமுக சார்பில் திமுக மாநில அமைப்பாளர் சிவா காராமணி குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பொழுது திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..

பின்னர் செய்தியாளரிடம் பேசிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா.. காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய நிர்வாகிகள் வெளியேறியதால் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழக்கும் என்று பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் கூறியதற்கு தனி மனிதர்கள் கட்சியை விட்டு சென்றதால் காங்கிரஸ் பலம் இழக்காது அது பாரம்பரியம் மிக்க கட்சி, கூட்டணி கட்சிகள் நாங்கள் இருக்கின்றோம்.

அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு சென்று சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றார்களா அல்லது கூட்டணி சேர்ந்தவர்களால் வெற்றி பெற்றார்களா என்பது தெரியும். அவர்களுக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு இல்லை.

தலைகனம் யாருக்கு என்றாலும் அழிவு நிச்சயம் மாநில அந்தஸ்து பெற்று தர என்னால் முடியும் என்று சொல்லும் நமச்சிவாயம் புதுச்சேரி அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் பல முறை இருந்துள்ளார். இதுவரை என்ன முயற்சி எடுத்துள்ளார் என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட நீராகரங்கள் அருந்தியதால் வாந்தி மயக்கம்

அச்சரப்பாக்கத்தில் இருந்து ஆனைக்குன்றம் வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி