நாமக்கல் காவிரி கரைமீதுள்ள அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு- வழிபாடு செய்த பக்தர்கள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர் சிவ ஆலயம் வடக்கிலிருந்து தெற்கே செல்லும் காவிரி கரை மீது அமைந்துள்ள இந்த ஸ்தலம் அசையா தீபம் மூலவர் முன் பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு தேவார வைப்பு ஸ்தலம் 1000 ஆண்டு முன் பழமை சிவ ஆலயத்தில்கும்பாபிஷேக நிறைவேற்று 48 நாட்கள் தினமும் மண்டல பூஜை விழா தொடர்ந்து நடைபெற்று .
வந்தது விழாவின் கடைசி நாளான 48 ஆம் நாள் நேற்று மூலவர் அசலதீபேஸ்வரருக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் கரும்புச்சாறு திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக, அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பஞ்சதீப உபசரிப்பு ஆராதனைகளும் மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.
பின் இங்குள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கும் அருள்மிகு மதுகரவேணி தாயாருக்கும் மஹா தீபம் காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது


