in

ரூ.29 -க்கு மானிய விலையில் பாரத் அரிசி


Watch – YouTube Click

ரூ.29 -க்கு மானிய விலையில் பாரத் அரிசி

பாரத் அரிசி” என்ற பெயரில் ரூ.29 -க்கு மானிய விலையில் ஒரு கிலோ அரிசி யை மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தவுள்ளது.

மானிய விலையில் வழங்கப்படும் இந்த அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் கிடைக்கும். இந்த “பாரத் அரிசி” உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இன்று டெல்லியில் அறிமுகப்படுத்த உள்ளார்.

முதற்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்திய உணவுக் கழகம் (FCI) இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக இது விற்பனை செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே பாரத் ஆட்டா மற்றும் பாரத் தால் ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது “பாரத் ஆட்டா” என்ற பெயரில் கோதுமை மாவு கிலோ ரூ.27.50க்கும், “பாரத் தால்” என்ற பெயரில் வெள்ளை கொண்டைக் கடலை கிலோ ரூ.60-க்கும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பாரத் ஆட்டா, பாரத் தால் போல பாரத் அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


Watch – YouTube Click

What do you think?

தென்காசி 4 வழிச்சாலையில் புதிய சுங்கச்சாவடி கடைகள் அடைத்து போராட்டம்

அடங்காமல் வாடி வாசலில் நின்ற காளை அமைதியாக அழைத்து சென்ற உரிமையாளர்