in

வாக்குக் கணிப்புகளை வெளியிட தடை


Watch – YouTube Click

வாக்குக் கணிப்புகளை வெளியிட தடை

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குக் கணிப்புகளை மேற்கொள்ளவோ, வெளியிடவோ தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை, 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையில்

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குக் கணிப்புகளை மேற்கொள்ளவோ, வெளியிடவோ கூடாது.

இதேபோல மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகளின் கீழ், மின்னணு ஊடகத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்ளிட்ட தேர்தல் சார்ந்த எந்தவொரு விஷயமும் வாக்குப் பதிவு நிறைவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தின்போது தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரம், அருணாசல பிரதேசம், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.

இதுதவிர, 12 மாநிலங்களின் 25 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

பிரதமரை தேர்வு செய்ய நாடாளுமன்றம் செல்லவில்லை மக்கள் உரிமைக்காக செல்வேன்

திண்டுக்கல் தேர்தல் பிரச்சசாரத்தில் களத்தில் கலகலப்பு