in

ஆழித் தேரோட்டம் – மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு


Watch – YouTube Click

ஆழித் தேரோட்டம் – மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

 

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 21ம் தேதி திருவாரூர் நகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வதேச பரிகார தலமாக வும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் வரும் மார்ச் 21ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தேர்த் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மார்ச் 21 தேர்த் திருவிழா அன்று திருவாரூர் நகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் நகர் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள மதுக்கூடங்கள் மற்றும் ஏப்எல்2 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் எப்எல்3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை தினமாக அறிவித்து அன்றைய தினம் அனைத்து கடைகளையும் மூட வேண்டும்.

தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மதுபான கடைகளின் மேற்பார்வையாளர் மற்றும் மது கூடங்களின் ஏலதாரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

7 ஆண்டாக கோயில் திருவிழா நடத்த தடை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு குமரன் பெயர் சூட்ட வேண்டும்