in

கோலிவுட்டையே உரைய வச்சிருக்காரு! அனுபமா பரமேஸ்வரன்..

கோலிவுட்டையே உரைய வச்சிருக்காரு! அனுபமா பரமேஸ்வரன்..

 

‘பிரேமம்’ படம் மூலமா நம்ம எல்லாரோட மனசையும் கொள்ளையடிச்ச நம்ம அனுபமா பரமேஸ்வரன், தமிழ்ல ‘கொடி’, ‘டிராகன்’, ‘பைசன்’னு வரிசையா மாஸ் பண்ணிட்டு வர்ற முன்னணி நடிகை!

எப்போதுமே கியூட்டா, சிரிச்ச முகத்தோட இருக்குற அனுபமா, சமீபத்துல கொடுத்த ஒரு பேட்டியில தன்னோட முந்தைய காதல் வாழ்க்கையில சந்தித்த பயங்கரமான அனுபவங்கள் பத்திப் பேசி கோலிவுட்டையே உரைய வச்சிருக்காரு!

அந்த பேட்டியில பேசின அனுபமா, “ஒரு கட்டத்துல என்னோட அசிஸ்டெண்ட்ஸ், ஸ்டாஃப்ஸ் கூட நான் இருக்கும்போது, அவங்க என் கண்ணைப் பார்த்தாலே நான் உடைஞ்சு அழுதுடுவேனோனு பயப்படுவேன். ‘எப்படி இருக்க அனுபமா?’னு யாராவது அன்பா கேட்டாக்கூட போதும், அந்த நிமிஷமே நான் உடைஞ்சு போய் அழுதுடுவேன். அந்த அளவுக்கு மனசளவுல பாதிக்கப்பட்டிருந்தேன்” அப்படின்னு சொல்லி அதிர்ச்சி கொடுத்திருக்காரு!

தன்னோட முன்னாள் காதலனைப் பத்திப் பேசின அவரு, “பொதுவா நம்ம கூட இருக்குற பார்ட்னர் கூட இருக்கும்போதுதான் நமக்கு மன நிம்மதி கிடைக்கணும். ஆனா நான் என் எக்ஸ்-பாய்பிரண்ட் கூட இருக்கும்போது எப்போதுமே ஒருவித பயத்தோடவே இருந்தேன்.

அவன் முன்னாடி ஒவ்வொரு வார்த்தையையும் ஆயிரம் தடவை யோசிச்சுதான் பேசுவேன்” அப்படின்னு சொல்லியிருக்காரு! தொடர்ந்து பேசின அனுபமா, “ஆரம்பத்துல அவன் என்மேல வச்சிருந்த அக்கறை மாதிரி தான் எல்லாமே தெரிஞ்சது.

என் தனிப்பட்ட வலிகளைப் பகிர்ந்துகிட்டப்போ அதை வச்சே என்னை எமோஷனலா டார்கெட் பண்ண ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துல நான் என்ன டிரஸ் போடணும்ங்கிறதைக்கூட அவனே முடிவு பண்ணான்.

என்னை அடிமைப்படுத்துற சுபாவம் அவன்கிட்ட இருக்குறதை உணர்ந்துதான் நான் அந்த லவ்வுல இருந்து வெளியே வந்தேன்” அப்படின்னு தன்னோட கசப்பான காதலைப் பற்றி ஓப்பனா பேசி உடைஞ்சிருக்காரு!

காதலிச்ச 3 மாசத்துலயே அவனோட குடும்பத்துல நிச்சயம் பண்ணப் பார்த்தப்போ அதைத் தள்ளிப்போட்டு, அந்த நச்சுத்தனமான காதல் உறவுல இருந்து தைரியமா வெளியே வந்த அனுபமாவைப் பாராட்டி ரசிகர்கள் இப்போ சோஷியல் மீடியாவுல சப்போர்ட் பண்ணிட்டு வர்றாங்க!

அனுபமா பரமேஸ்வரனின் இந்த தைரியமான பேச்சு பத்தியும், காதல்ல நடக்குற இந்த மாதிரி டாக்ஸிக் விஷயங்கள் பத்தியும் நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே? மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!”

What do you think?

சமந்தாவின் 1000 நாள் சேலஞ்ச்! வைரலாகும் இன்ஸ்டா பதிவு

Roulette Bonuses India for PC: A Comprehensive Guide