வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு குழுவினர் அதிரடி சோதனை
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர் அதிரடி ஆய்வு.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தில் சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை…..
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அனுதினமும் இருசக்கர வாகன பதிவு, கார்கள், லாரிகள், லோடு வேன்கள் என பல்வேறு வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இது மட்டுமின்றி எஃப்.சி என்று சொல்லக்கூடிய வாகன புதுப்பிக்கும் முறை, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு கட்டணம் என்று அரசு நிர்ணயித்து அதன் மூலம் பணம் கட்டி பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இது போன்ற பணிகளுக்கு கூடுதல் கட்டணம் மற்றும் புரோக்கர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகளவு பணம் வாங்குவதாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கின்றது.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் அருள்பிரசாத் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் மூன்று மணி நேரம் தொடர்ந்து இந்த சோதனையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


