in

அருள்மிகு பெரியாண்டச்சி அம்மன் திருக்கோவில் பெளர்ணமி பூஜை

அருள்மிகு பெரியாண்டச்சி அம்மன் திருக்கோவில் பெளர்ணமி பூஜை

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ஆயிரம் ஆண்டு பழமையான
அருள்மிகு பெரியாண்டச்சி அம்மன் திருக்கோவில் நடைப்பெற்ற பெளர்ணமி பூஜையில் பெரியாண்டச்சி அம்மனுக்கு நர்மணமலர்களால் அபிஷேகம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டுவழிப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பாட்டினம் அருகே உள்ள பென்னேஷ்வரம் மடத்தில் அமைந்துள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியாண்டச்சி அம்மன் ஆலயத்தில் பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

பெளர்ணமியை முன்னிட்டு நடைப்பெற்ற இந்த சிறப்பு பூஜையின்யின் போது பெரியாண்டச்சி அம்மனுக்கு பல வண்ண நறுமணம் மிக்க சிறப்பு மலர்களால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் கண்கவர் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்த பெரியாண்டச்சி அம்மனை, கிரிவலம் சென்ற பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

இந்த பௌர்ணமி பூஜையில் காவேரிப்பட்டணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்துவழிப்பட்டனர்.

மேலும் பெளர்ணமி பூஜையை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் சார்பில் அறுசுவையான அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

நட்சத்திர கோவில் முருகன் சன்னதியில் கிருத்திகை வழிபாடு