புரட்டாசி மாத சதுர்த்தசி நடராஜர் அபிஷேகம்
நடராஜர் அபிஷேகம் புரட்டாசி மாத சதுர்த்தசி திதியினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.
நாமக்கல் மாவட்டம் – பரமத்தி வேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் 25.9.26 வெள்ளிக்கிழமை சதுரத்தசி திதியினை முன்னிட்டு தேவாரம் திருவாசகம் ஓதலுடன் கைலாய வாத்தியங்கள் முழங்க காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை புரட்டாசி மாத மாத சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.
நிகழ்வில் நால்வர் பெருமக்கள் சண்டிகேஸ்வரர், அப்பூதியடிகள் ஆகிய மூர்த்தங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மதியம் 1 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜை உடன் அன்னம் பாலிப்பும் நடைபெற்றது.

விழாவில 500க்கும் மேற்பட்ட அடியார் பெருமக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு அருட்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் மற்றும் அடியார் பெருமக்கள் சிவனடியார்கள் ஊர் மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

