மன்னர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
மன்னர் சரபோஜியின் 249 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தஞ்சாவூரை சோழர்கள் நாயக்கர்கள் மராட்டியர்கள் என பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர் இவர்களில் குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவரான 2 ம் சரபோஜியின் 249வது பிறந்த நாள்.
இதையொட்டி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தர்பார் மண்டபத்தில் அமைந்துள்ள மன்னர் சரபோஜியின் முழு உருவ பளிங்கு சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ரேவதி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் அரண்மனை வளாகம் சரஸ்வதி மகால் நூலக ஊழியர்கள் கலந்து கொண்டு சரபோஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

