சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் மோதிய டாரஸ் லாரி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சத்யா நகர் முருகன் கோவில் அருகே வசித்து வருபவர் ஆறுமுகம் என்பவரது மகன் நரசிம்மன்.
வந்தவாசி திண்டிவனம் நெடுஞ்சாலையில், திண்டிவனத்தில் இருந்து பாரம் இறக்கிவிட்டு ஸ்ரீபெரும்புதூருக்கு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை எழிலரசன் என்பவர் ஒட்டி வந்தார்.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் மோதி நரசிம்மன் என்பவரது வீட்டின் முன் கூரையை இடித்து நின்றது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் நல் வாய்ப்பாக உயிர் தப்பினார்கள்
இந்த விபத்து குறித்து பொன்னூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

