in

அழகன் முருகன் கோவில் சிறப்பு பூஜை

அழகன் முருகன் கோவில் சிறப்பு பூஜை

 

ஆவணி மாத செவ்வாய்க்கிழமை முன்னிட்டு அழகன் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோவிலில், ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி அதிகாலை முதலே கோவிலுக்கு வந்த பக்தர்கள் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமான் வண்ண வண்ண மலர்களால் அழகிய புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்காரத்துடன் காட்சியளித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜையை முன்னிட்டு கோவில் . பூஜையின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் கோவில் கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது.

What do you think?

மருதம் ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா