in

தண்ணீர் கேன் மாற்றுவதில் தகராறு

தண்ணீர் கேன் மாற்றுவதில் தகராறு

 

வேளாங்கண்ணியில் தண்ணீர் கேன் மாற்றுவதில் தகராறு 10 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கடை உரிமையாளரை தாக்கும் பரபரப்பு வீடியோ காட்சி

நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட திருநங்கைகள் வேனில் வேளாங்கண்ணிக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் உத்திரைய மாதா கோவில் தெரு பகுதியில் உள்ள ஜான் போஸ்கோ என்பவரின் கடையில் தண்ணீர் கேன் வாங்கி சென்றுள்ளனர். மாலை தண்ணீர் கேனை மாற்றிக் கொடுத்ததாக கூறி கடை உரிமையாளர்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 10க்கும் மேற்பட்டோர் ஜான் போஸ்கோவை தண்ணீர் கேனால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஜான்போஸ்கோ நாகப்பட்டினம் ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி காவல்துறையினர் திருநங்கைகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

போக்குவரத்து நெரிசல்: சட்டப்பேரவைக்கு நடந்தே சென்ற எம்.எல்.ஏ…

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி