in

ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆலய கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை

ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆலய கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை

 

மதநல்லிணக்கத்தை பறைசாற்றிய நாகை முஸ்லிம் ஜமாத் – ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆலய கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை.

நாகப்பட்டினம் ஆரியநாட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 24ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விழாவில், தொடர்ந்து சிறப்பு யாகவேள்விகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, நாகை முஸ்லிம் ஜமாத்தினர் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆலயத்திற்கு சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இரு சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்றனர்.

கும்பாபிஷேக விழாவில் நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும்!