திரௌபதி அம்மன் கோவில் திருவிழா: பீமன், திரௌபதி வேடமணிந்து பக்தர்கள் வீதி உலா
ஆர்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா: பீமன், திரௌபதி வேடமணிந்து பக்தர்கள் வீதி உலா!
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் ஆடி மற்றும் ஆவணி மாதத் திருவிழா ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஆகஸ்ட் 28 (வெள்ளிக்கிழமை) மாலை திருவிளக்கு பூஜையும், செப்டம்பர் 4 (வெள்ளிக்கிழமை) பூக்குழி (தீமிதி) திருவிழாவும் நடைபெறவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, இன்று பெத்தார்தேவன்கோட்டை கிராம மக்கள் பீமன் மற்றும் திரௌபதி அம்மன் மற்றும் பேராண்டிகள் வேடமிட்டு வீதி உலாவாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தி வழிபட்டனர். இந்நிகழ்வில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

