in

மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வளாகத்தில் 80வது சுதந்திர தின விழா நடந்தது. மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியதாரா தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றினார்.

விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் சார்பு நீதிபதி கௌதமன், தலைமை குற்றவியல் நீதிபதி தமிழ்செல்வி, முதன்மை சார்பு நீதிபதி சுதா, கூடுதல் சார்பு நீதிபதி பரமசிவம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பவதாரணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, அவர்களும் குற்றவியல் நடுவர் நீதிபதி கமலனதான், மாயூரம் மற்றும் மயிலாடுதுறை வக்கீல் சங்கத்தினர் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.‌

மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ விஷ்ணுபிரியா தேசியக் கொடியை ஏற்றினார்.மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில்
கோட்ட பொறியாளர்

மணிசுந்தரம் தேசியக் கொடியை ஏற்றினார் அப்போது உதவி கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி,உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து மயிலாடுதுறை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பசுபதி தேசிய கொடியை ஏற்றினர். இதேபோன்று பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது தொடர்ந்து அரசு அலுவலகங்களிலும்,பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

What do you think?

வெற்றிக் கொடி கட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்

“கர்நாடகாவை விட்டே விரட்டுவோம்!” – யாஷிற்கு அதிரடி எச்சரிக்கை!