in

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 80-வது சுதந்திர தின விழா

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 80-வது சுதந்திர தின விழா

 

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 80-வது சுதந்திர தின விழா: முதல் பெண் எம்.எல்.ஏ டி.லதா தேசியக்கொடியேற்றி மரியாதை


நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

​இவ்விழாவில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி. லதா கலந்துகொண்டு தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
​​கடந்த 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட கீழ்வேளூர் தனித் தொகுதி, முதன்முதலில் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற டி. லதா, கீழ்வேளூர் தொகுதியின் 4-வது சட்டமன்ற உறுப்பினராகவும், இத்தொகுதியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

​இந்நிலையில், கீழ்வேளூர் தொகுதி வரலாற்றில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர், தொகுதி அலுவலகத்தில் சுதந்திர தின தேசியக்கொடியை ஏற்றி வைப்பது இதுவே முதல் முறையாகும்.

​இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சுதந்திர தின வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

What do you think?

நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் தேவி ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோவில் ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது 

இளங்கிளி அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா