வடலூரில் மது மற்றும் மாமிசக் கடைகளை அகற்றக் கோரி பேரணி
கடலூர் மாவட்டம் வடலூரில், மது மற்றும் மாமிசக் கடைகளை அகற்றி, வடலூரை புனித நகரமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.
வடலூர் சத்திய ஞான சபையில் இருந்து புறப்பட்ட பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று வடலூர் பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
பேரணியில் பங்கேற்றவர்கள், வடலூரின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் வகையில் மது மற்றும் மாமிசக் கடைகளை அகற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு வடலூரை புனித நகரமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், வடலூரின் ஆன்மிக சிறப்பையும் வள்ளலாரின் சன்மார்க்க கொள்கைகளையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பேரணியில் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


