in

பாம்பன் தெற்கு கடற்கரையில் பிடிபட்ட மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!

பாம்பன் தெற்கு கடற்கரையில் பிடிபட்ட மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!

பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் மீனவர்கள் தினந்தோறும் கடலுக்குச் சென்று பல்வேறு வகையான மீன்கள் மற்றும் கடல் உணவுகளை பிடித்து வருகின்றனர். இவ்வாறு பிடிக்கப்படும் மீன்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சேகரிக்கப்பட்டு, அவற்றின் வகை மற்றும் தரத்தின் அடிப்படையில் தனித்தனியாக பிரித்து எடுக்கப்படுகின்றன.

இதில் நண்டு, கண் நண்டு, டிப் கணவாய், மட்டசிக்கி, விரால், புள்ளி கலவை, பொன்தரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் மற்றும் கடல் உணவுகள் தனியாக பிரிக்கப்படுகின்றன. பின்னர் இவை ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் சுத்தம் செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்படுகின்றன.
பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் கிடைக்கும் குறிப்பிட்ட வகை கடல் உணவுகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளதால், அவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மீனவர்களின் பிடிப்புகளுக்கு கூடுதல் மதிப்பு கிடைப்பதுடன், மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
பாம்பன் கடல் பகுதியில் கிடைக்கும் மீன்கள் உள்ளூர் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதோடு, வெளிநாட்டு சந்தைகளுக்கும் முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

தஞ்சை டைடல் பூங்காவில் இருந்து துவங்கிய மாரத்தான்

ஓசூர் சோமேஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு