in

ஸ்ரீ லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளியின் 27-வது ஆண்டு விளையாட்டு விழா

ஸ்ரீ லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளியின் 27-வது ஆண்டு விளையாட்டு விழா

 

நாகப்பட்டினம் ஸ்ரீ லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளியின் 27-வது ஆண்டு விளையாட்டு விழா கோலாகலம்.

​நாகப்பட்டினம் ஸ்ரீ லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளியின் 27-வது ஆண்டு விளையாட்டு விழா, நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

​இவ்விழாவிற்கு நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பாலசந்திரா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விளையாட்டுத் தீபத்தை ஏற்றி வைத்துப் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.

​முன்னதாக, விழாவின் தொடக்க நிகழ்விற்குப் பள்ளியின் அறங்காவலர் லலித்தா ராமமூர்த்தி மற்றும் பள்ளியின் தாளாளர் ஆர்த்தி சந்தோஷ் ஆகியோர் தலைமை தாங்கி முன்னிலை வகித்தனர்.

​பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வரிசைப்படுத்துதல், தவளைப் பந்தயம், தண்ணீர் நிரப்புதல், ஓட்டப் பந்தயம் மற்றும் ஜூட் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விறுவிறுப்பான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் மாணவர்கள் மிக உற்சாகத்துடன் பங்கேற்றனர். போட்டிகளின் ஒரு பகுதியாகக் குழந்தைகளின் கலை நயமிக்க நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்று, பெற்றோர் மற்றும் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

​மேலும், விழாவிற்கு வருகை தந்த பெற்றோர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்காகப் பிரத்யேகச் சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

​விழாவின் நிறைவாக, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வினோத் நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டு மாணவர்களைத் உற்சாகப்படுத்தினர்.

What do you think?

சிதம்பரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகத்தை கடலூருக்கு மாற்றுவதாக தகவல்.

குருத்தோலை சப்பரத்தில் மஹா மாரியம்மன் வீதியுலா