in

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரமக்குடி ஆர்டிஓ (RDO) கைது

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரமக்குடி ஆர்டிஓ (RDO) கைது

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் (RDO) சரவணபெருமாளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக சரவணபெருமாள் பணியாற்றி வருகிறார்  இவரிடம் பெயர் குறிப்பிட விரும்பாத மனுதாரர் ஒருவர், மணல் குவாரி அமைப்பதற்கான தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வழங்கக் கோரி கடந்த 11 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என ஆர்டிஓ சரவணபெருமாள் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் வழங்க விரும்பாத மனுதாரர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் பணத்தை மனுதாரர், ஆர்டிஓ சரவணபெருமாளிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், லஞ்சப் பணத்தை பெற்ற சரவணபெருமாளை கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ சரவணபெருமாள் மற்றும் அவரது ஓட்டுநர் சுந்தர் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

எழுச்சி மாநாட்டிற்கு 100 வாகனங்களில் செல்ல தீர்மானம்

திருவண்ணாமலைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா