in

நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய தொடர் காத்திருப்பு போராட்டம்

நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய தொடர் காத்திருப்பு போராட்டம்

 

நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய கோரி கும்பகோணத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

கும்பகோணத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் அலுவலகத்தின் முன்பு, அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்யும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஹெச்.எம்.எஸ், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன.

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 17 டன், 20 லட்சம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் கேட்பாரற்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின் போது, கோட்டாட்சியர் திருமலை அவர்கள் பத்து நாட்களுக்குள் அனைத்து நெல் மூட்டைகளும் இயக்கம் செய்யப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இதுவரை எந்த நெல் மூட்டையும் இயக்கம் செய்யப்படவில்லை என தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது திடீரென பெய்யும் மழையினால், சுமார் 200 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு சேதம் ஏற்பட்டால் அதற்கான பல லட்ச ரூபாய் இழப்பை கொள்முதல் பணியாளர்களே ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே அனைத்து நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்பட்டு இயக்கம் செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஹெச்.எம்.எஸ் மாநில பொதுச்செயலாளர் திரு. நாகராஜன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திரு. கிருஷ்ணமூர்தி மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடி பூர பிரம்மோற்சவம் விழா

Premium Online Casinos Australia: Where Luxury Meets Responsible Play