in

செஞ்சி அருகே கல்லூரி பேருந்து மோதல்; மாணவர்கள் காயம்

செஞ்சி அருகே கல்லூரி பேருந்து மோதல்; மாணவர்கள் காயம்

திண்டிவனம் பகுதியில் இருந்து திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிக்கு, கிராமப்புற மாணவர்களை தினசரி அழைத்துச் செல்லும் கல்லூரி பேருந்து வழக்கம்போல் கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் களையூர் கிராம பகுதியில் திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த உணவகக் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பேருந்தில் ஓட்டுநர், ஒரு பேராசிரியர் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 17 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 2 மாணவர்களுக்கு கை முறிவு ஏற்பட்டது. மேலும், ஒரு பேராசிரியர், பேருந்து ஓட்டுநர் மற்றும் 13 மாணவர்கள் லேசான காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பேருந்தில் வழக்கத்தை விட குறைவான மாணவர்கள் பயணம் செய்ததால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக களையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பு நிலவியது.

What do you think?

சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்

திருப்பதி மலையில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்