in

422 கிடாய்கள் பலியிட்டு 20,000 பக்தர்களுக்கு அன்னதானம்

422 கிடாய்கள் பலியிட்டு 20,000 பக்தர்களுக்கு அன்னதானம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேர்ப்புளி கிராமத்தில், கம்புகுத்து விநாயகர், வந்தவழி பெரியகருப்பசாமி, பெரியகாண்டியம்மன், கன்னிமார், முருகன் மற்றும் வைரவன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத முதல் வியாழக்கிழமை ஆடி பூஜை விழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது.

நேர்த்திக்கடனாக 422 கிடாய்கள் வழங்கிய பக்தர்கள்

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள், நேர்த்திக்கடனாக 422 கிடாய்கள் மற்றும் 10 டன் அரிசி உள்ளிட்ட அன்னதானப் பொருட்களை கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர்.

80 சமையலர்கள்… 4 டன் கிடா கறி… 10 டன் அரிசி

பூஜையை முன்னிட்டு 80 சமையலர்கள் இணைந்து சுமார் 4 டன் கிடா கறி மற்றும் 10 டன் அரிசி கொண்டு பிரம்மாண்டமான அன்னதானத்தை தயாரித்தனர்.

20,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம்

வந்தவழி பெரியகருப்பசாமிக்கு உச்சி பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 20,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கிடாய் கறி குழம்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. நேர்த்திக்கடனாக கிடாய்களை வழங்கிய பக்தர்களுக்கு டோக்கன் முறையில் குடங்களில் கிடாய் கறி குழம்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது.

What do you think?

₹1.10 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகம் திறப்பு

அனிச்சம்பாளையம் ஆலயத்தில் மஹா சண்டியாகம், பால்குட அபிஷேக விழா