in

ஆடி இரண்டாம் வெள்ளி: பச்சையம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு

ஆடி இரண்டாம் வெள்ளி: பச்சையம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலை பச்சையம்மன் ஆலயத்தில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் அம்மனுக்கு கோழி மற்றும் கிடா வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் முடி காணிக்கை கொடுத்து வழிபட்டனர்.

திருவண்ணாமலையில் பழமை வாய்ந்த பச்சையம்மன் ஆலயம் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு பச்சையம்மனுக்கு பச்சரிசி மாவு, அபிஷேக பொடி, கஸ்தூரி மஞ்சள், குங்குமம், விபூதி, பால், தயிர், இளநீர் எலுமிச்சைச் சாறு, சந்தனம், கதம்பப்பொடி வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு பச்சையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக குடும்பத்துடன் பச்சையம்மன் ஆலயத்தின் முன்பு பொங்கல் வைத்து கோழி மற்றும் கிடா வெட்டி பக்தர்கள் முடி காணிக்கை கொடுத்து விளக்கு ஏற்றி பச்சையம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து பச்சையம்மன் கோவில் வளாகத்தில் பிரம்மாண்ட வடிவில் உள்ள வாயு முனி, விளாடன் முனி, கரி முனி, வேதமுனி, செம்முனி, முத்து முனி, வீரமுனி ஆகிய காவல் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

What do you think?

‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு; பொதுமக்களுக்கு அன்னதானம்

ஆடி வெள்ளி: தஞ்சை கோடியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்