பழனி மலைக்கோயில் உண்டியல் எண்ணிக்கை
பழனி மலைக்கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், 20 நாட்களில், 2 கோடியே 89 லட்சத்து 45 ஆயிரத்து 711 ரூபாய் ரொக்கப் பணமும், 470 கிராமிற்கும் அதிகமான தங்கம் மற்றும் 6.8 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி மலைக்கோயிலில் உள்ள கார்த்திகேயன் மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர்(பொ) வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்றது.
(21.07.2026) நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின் முடிவில், ரொக்கப் பணமாக ரூ. 2,89,45,711 (இரண்டு கோடியே எண்பத்தொன்பது லட்சத்து நாற்பத்தைந்தாயிரத்து எழுநூற்று பதினொன்று ரூபாய்) கிடைக்கப்பெற்றது.
மேலும், தங்கம் 470 கிராம் 200 மில்லிகிராமும், வெள்ளி 6,857 கிராம் 800 மில்லிகிராமும் (சுமார் 6.8 கிலோ) காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது. இவை 20 நாட்களில் பெறப்பட்டவையாகும்

இதுமட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளிநாட்டுச் கரன்சி நோட்டுகள் 739 பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் அலுவலர்கள், வங்கிப் பணியாளர்கள் மற்றும் பழனியாண்டவர் கலைக்கல்லூரிப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

